என்னால் எத்தனை பேருக்கு பரவி இருக்குமோ? நெல்லை இருட்டுக்கடை அல்வா அதிபர் தற்கொலை செய்தது இதற்கு தான்! அதிர்ச்சி தகவல்!

புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலிக்கு உவந்த அடையாளமாக "இருட்டுக்கடை அல்வா" திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இந்த இருட்டுக்கடை அல்வா பிரபலமடைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினரே முதன்முதலில் திருநெல்வேலியில் இந்த அல்வா செய்வதை தொடங்கினர்.

பண்டைய காலத்தில் ஜமீன்தார் முறை செயல்பட்டு வந்த போது ஜமீன் வீட்டில் தினமும் அல்வா கிண்டப்பட்டு வந்தது. ஜமீன்தார் முறை முடிந்தபிறகு, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே கிருஷ்ணா சிங் என்பவர் இருட்டுக்கடை அல்வா கடையை முதன்முதலில் தோற்றுவித்தார். அவருக்குப் பின்னர் அவருடைய மகனான பிஜிலி சிங் கடையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

ஆனால் கலால் துறையில் செயல்பட்டு வந்ததன் காரணமாக அவரால் கடையில் நிர்வாகத்தை கவனிக்க இயலவில்லை. ஆதலால் தன்னுடைய மனைவியின் சகோதரரான ஹரிசிங்கை அழைத்துவந்து கடையை நிர்வாகிக்க வைத்தார். ஹரிசிங் பொறுப்பேற்றதன் பிறகுதான் இருட்டுக்கடை அல்வா புகழ்பெற தொடங்கியது.

இந்த கடைக்கு பெயர் பலகை ஒன்றும் கிடையாது. 40 வாட்ஸ் குண்டு பல்பு உடன் இந்த கடை இயங்கி வருகிறது. மாலை 5 மணிக்கு கடை திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்குள் அனைத்து ஆழ்வார்களும் விற்க்ப்பப்பட்டுவிடும். கூட்டம் அலை மோதுகின்ற காரணத்திற்காக, காவல்துறையினர் எப்பொழுதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர்.

ஹரிசிங்கின் வயது 79. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருமகள் சென்ற ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது நோய் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த செய்தியை கேட்டவுடன் மனதளவில் ஹரிசிங் நொந்து போயுள்ளார்‌. தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியாமல் தொடர்ந்து கடையில் அல்வா விற்கப்பப்பட்டு நோய் பரப்பப்பட்டுள்ளது என்ற குற்ற உணர்ச்சியில் அவர் துடிதுடித்து வந்தார்.

மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் மருத்துவமனையிலேயே நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.