குழந்தைக்கு காய்ச்சல்! டாக்டர் கொடுத்த மாத்திரையில் கம்பி! அதிர்ந்த தாய்-தந்தை! சங்ககிரி பரபரப்பு!

காய்ச்சலுக்காக குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் பொதுமக்கள்  முற்றுகையிட்டது சேலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டத்தில் புள்ளிபாளையம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு சிகிச்சை பார்ப்பதற்கு ஆரம்ப சுகாதார மையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலையில் அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர், மாத்திரைகளை எழுதி கொடுத்தார். மாத்திரைகளை வாங்கி கொண்டு சென்றனர். வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது அதில் கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி ஆரம்ப சுகாதார மையத்தில் முற்றுகையிட்டனர்.

சுகாதார மையத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். காவல்துறையினர் சமாதானப்படுத்தியதால், பொதுமக்கள் சிறிது நேரத்தில் கட்டியாகி கலைந்து சென்றனர். 

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.