கடைசியாக களமிறங்கி வரலாற்றில் எவரும் செய்யாத சாதனை! அசத்திய அயர்லாந்து வீரர்!

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியின் டிம் முர்டக் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை எவரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.


இந்த போட்டியில் அயர்லாந்து அணியில் கடைசி வீரராக களமிறங்கிய (11வது வீரர்) இரண்டு இன்னிங்சிலும் 25 ரன்களுக்கு மேல் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் போட்டிகளில் எவரும் 11 வது வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் 25 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் எந்த வீரரும் செய்யாத சாதனையை இவர் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் இந்த சாதனையை தனது இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலேயே செய்து அசத்தியுள்ளார்.

இவர் முதல் இன்னிங்சில் கடைசி வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 54 ரன்களை எடுத்தார். தனது இரண்டாவது இன்னிங்சில் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இது போன்ற சாதனைகளை அயர்லாந்து வீரர்கள் செய்திருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணியும் அவர்களுக்கு சற்றும் சலிக்காமல் மற்றுமொரு சாதனையை செய்துள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை அபாரமாக வென்றது.

இதனால் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் வெற்றியை அடைந்து ஆப்கானிஸ்தான் அணி சாதனை செய்துள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி மட்டும் தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சாதனை செய்திருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தபடியாக தனது இரண்டாவது போட்டியிலே வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை செய்துள்ளது.