ஆண் நண்பருடன் மிக நெருக்கம்! பிரபல நடிகரின் மகள் புகைப்படம் வைரல்!

பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான ஆமீர் கானின் மகள், ஐரா கான் அவரது காதலன் மிஷாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தில்  நடிகர்  மிஷால், ஐராவை  பின்புறத்திலிருந்து கட்டி போடும் விதமாக காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படத்தை  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் ஐரா.  மேலும் இதற்கு கேப்சனாக   "Everything will be ok" என்று  வெளியிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தது. இதில் ரசிகர் ஒருவர் மிஷாலை பார்த்து "நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி"  என கமெண்ட் செய்திருந்தார். கடந்த ஜூன் மாதம்தான் மிஷாலை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் வெளியிட்டு அதனை உறுதிப்படுத்தினார். 

இதனையடுத்து ஐராவின் பிறந்த நாளின்போது நடிகர் மிஷால் அவருக்கு வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தின் மூலம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.