பொது இடத்தில் கட்டி அணைத்து ஆண்! வெட்கத்தோடு காதலை ஏற்ற இளம் பெண்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கட்டிப் பிடித்து காதலைத் தெரிவித்த ஜோடியை காவல் துறையினர் கைது செய்து கம்பியெண்ண வைத்தனர்.


மதம் சார்ந்த கடுமையான சட்டக் கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடு ஈரான். அந்தக் கட்டுப்பாடுகளுக்கிடையே காதல் உள்ளிட்ட குதூகலங்களை நினைத்துக் கூட பார்த்திராத அரோக் நகர மக்களின் கண்களுக்கு அன்றைய தினம் விருந்து ஒன்று கிடைத்தது. ஆண் ஒருவர் தான் விரும்பும் பெண்ணிடம் தன்னை மறந்து காதலை வெளிப்படுத்திய காட்சிதான் அது .

பெண்ணின் விரலில் மோதிரத்தை அணிவித்த அவர் தனது காதலை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியாகக் கட்டியணைத்துக் கொண்டனர். இந்தக் காட்சிகளை வழக்கம் போலவே அங்கிருந்த சிலர் செல்ஃபோனில் படம் பிடிக்கத் தவறவில்லை.

இந்தக் காட்சிகளை இணையதளத்திலும் வெளியிட்டனர். பொறுக்குமா ஈரான் அரசுக்கு. உடனடியாக காதலர் இருவரின் வீட்டுக்கும் போலீஸ் வந்தது. இஸ்லாமிய மத நெறிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சில நாட்கள் கம்பி எண்ணிய அவர்கள் பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் தற்போது சந்தித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.