சசிகலாவுக்கு தண்ணி காட்டிய ரூபா ஐபிஎஸ் நியாபகம் இருக்கா? அவங்களோட புது அவதாரம் இது!

ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தற்போது பாடகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.


ஐபிஎஸ் அதிகாரியான ரூபா முதன்முதலாக கன்னடத் திரைப்படத் துறையில் பாடகியாக அறிமுகமாகி உள்ளார். இவர்  "பேயலதா பீம்மண்ணா" என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சசிகலா சிறையில் இருந்தபோது அங்கு நடந்த சம்பவங்களை தைரியமாக வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் போலீஸ்  அதிகாரி ரூபா. இத்தகைய  தைரியமிக்க பெண்மணி தற்போது ஒரு புதிய அவதாரத்தில் தோற்றமளிக்கிறார்.

அதாவது கன்னட திரைப்படம் ஒன்றில் பாடகியாக உருவெடுத்துள்ளார்.  போலீஸ் அதிகாரி ரூபா சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ஒன்றில் பாடல் ஒன்றை பாடினார். அதனைப் பார்த்த பீமலதா திரைப்படக் குழுவினர் இவரை தங்களுடைய திரைப்படத்தில் பாடுவதற்காக அழைப்பு விடுத்தனர்.

இந்த அழைப்பை ஏற்று பாடலை வெற்றிகரமாக பாடி முடித்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி ரூபா.  

இந்த பாடல் பாடிய அனுபவத்தைப் பற்றிய ரூபாவிடம் கேட்ட பொழுது அவர்கள் நான் இந்துஸ்தானி இசையை கற்றுக் கொண்டுள்ளேன் . அந்த அனுபவத்தையும் மையமாக வைத்து இந்த திரைப்பட பாடலை பாடி உள்ளேன் . 

இந்த பாடலை பாடுவதற்காக சுமார் ஒரு வார காலம் நல்ல முயற்சி செய்து உள்ளேன் . ஆகையால் இந்த பாடல் நல்லபடியாக வந்துள்ளது என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.