அரசு ஊழியர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் 60 ஆபாச வீடியோ! நெளிந்த பெண் ஊழியர்கள்! காரணம் யார் தெரியுமா?

அரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படங்கள் வெளியான சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அரசு தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இங்கு‌ பணியாற்றும் ஊழியர்கள் வாட்ஸ்அப் குரூப் அமைத்து தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும், எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் அந்த குரூப்பில் கலந்தாலோசித்து வருகின்றனர். 

சங்கத்தின் தலைவரும் செயலாளரும் அந்த குரூப்பின் admin களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆலோசனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஆபாச படங்கள் குரூப்பில் வந்துள்ளன. இதனால் பெண் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சங்கத்தின் தலைவரிடம் இது பற்றி தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சங்க நிர்வாகி ஒருவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

குரூப்பில் இருந்த ஒருவரது மொபைல் போன் காணாமல் போகியுள்ளது. அதனை பயன்படுத்திய நபர் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் தவறு வெளியே தெரியாமல் இருப்பதற்காக பொய் கூறி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் உயர் அதிகாரிகள் அட்மினை பதவியில் இருந்து நீக்கினர். இந்த சம்பவமானது கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.