திருமணமான பெண்களுடன் நிர்வாண பூஜை! சேலத்தை மிரட்டும் இரிடியம் சாமியார்!

பெண்களை நிர்வாணப்படுத்தி சாமி சிலைகளுக்கு பூஜை செய்து வந்த போலி சாமியாரைப்பற்றி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சங்கர் நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு புஷ்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவனை இழந்து விதவையாவார். தன் மகனுடன் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார். 

அந்த வீட்டு ஓனரின் மகன் பல்வேறு போக்குவரத்து தொழிலாளர்களின் நண்பராவார். அவர்களுடன் இணைந்து இரிடியம்யின் பொருட்களை பறிமுதல் செய்த வந்து பூஜித்தார். இந்நிலையில் அப்பகுதிக்கு அருகேயுள்ள பெண்களை நிர்வாணப்படுத்தி இரிடியம் பூஜைக்கு வரவழைத்தார்.

பின்னர்  தன் உறவினர்கள் மூலம் அவர்களின் அந்தரங்க படங்களை எடுத்துள்ளார். பின்னர் அதே பெண்களை மிரட்டி மீண்டும் பூஜைக்கு வரவழைத்துள்ளார். இதே போன்று பல மாதங்களாக அவர் செய்து வந்துள்ளார். தன்னையும் இதேபோன்று வற்புறுத்தினார் என்று கூறியுள்ளார்.

மேலும், நான் இணங்க மறுத்ததால் என் வீட்டை பட்டாபோட்டு மிரட்டினர். 1 லட்சம் ரூபாய் வரை என்னிடமிருந்து அபகரித்தனர். மேலும் என்றாவது என் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரிடம் இதுபோன்ற காம கொடுரர்களிடம் இருந்து அப்பாவிபெண்களை காக்க வேண்டுமென்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.