பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
38 வயது! ஒரு குழந்தை! ஆனாலும் கட்டு குலையாத கரீனா! காரணம் இது தான்!

பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் சைப் அலி கானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த பல்வேறு பாலிவுட் திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. முன்னணி நடிகர்களான ஷாருக்கான் சல்மான்கான், ரித்திக் ரோஷன் ஆகியோருடன் இணைந்து நடித்த படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன.
தற்போது இவர் "இஷ்க் காம்பாட்" ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனான அக்ஷய் குமாரோடு 9 ஆண்டுகள் பிறகு நடித்து வருகிறார். மேலும் கியரா அத்வானி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் கரீனா கபூர் கர்ப்பிணி வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகர்களில் பலர் தங்கள் உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு ஜிம், யோகா ஆகிய பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு கரீனா கபூர் வழக்கமாக யோகா பயிற்சி செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அவர் யோகா பயிற்சியின் போது தன் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அப்படங்கள் அவருடைய உடல் கழிவுகளை சித்தரிக்கும் வகையில் இருக்கும். ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் அவர் யோகா செய்யும் போட்டோக்களை கண்டு மகிழ்வர்.
இந்நிலையில், அவர் மீண்டும் ஒருமுறை தான் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளதாகவும், அவர் உடல் அழகின் மீது எத்தகைய கவனம் செலுத்துகிறார் என்பதனை காட்டுவதாகவும் அவரது ரசிகர்கள் வலைதளங்களில் புகழ்ந்துள்ளனர்.