மியூசிக் டைரக்டருடன் காதல், டேட்டிங், எல்லாம்! ஸ்டார் நடிகரின் மகள் ஷாக் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் இரா கான் நியூயார்க் நகரின் இசையமைப்பாளரான மிஷால் கிரிபாலினி என்பவருடன் உல்லாசமாக பழகி வருவதாக வெளிவரும் செய்திகள் பாலிவுட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். இவர் நடிகர் சூர்யா நடித்து தமிழில் வெளிவந்த கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடித்தவர். மேலும் "லகான்" இந்தி திரைப்படத்தில் நடித்து பல அவார்டுகளையும் வென்றவர் ஆவார்.

இருவருக்கு இரண்டு முறை திருமணம் ஆகி உள்ளது. முதல் மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று,தற்போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரா கான் என்ற மகள் உள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் இசையமைப்பாளரான மிஷால் கிரிபாலினியுடன் நெருங்கி பழகுவதாக பல்வேறு வதந்திகள் பரவின.

இருவரும் நெருக்கமாக இருப்பதாக பல்வேறு புகைப்படங்களையும் இவர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இரா கான்("Ask me anything on chat") என்னும் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மிஷால் கிரிபாலினியுடன் தான் டேட்டிங் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார். இராவின் பிறந்தநாள் அன்று மிஷால் அவர்கள் " நீங்கள் மிகவும் சாதாரணமானவர்;

நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். இருவரும் சேர்ந்து நெட்பிளிக்ஸ் தொடரை உன் பிறந்தநாளான இன்று பார்க்க வேண்டும்" என்று வாழ்த்தினார். இருவரும் நெருங்கி பழகி வருவது பாலிவுட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது