தி.மு.க.வில் எப்போதெல்லாம் உட்கட்சித் தேர்தல் ஆரம்பமாகுமோ, அந்த நேரத்தில் எல்லாம் உட்கட்சி மோதல், சண்டை, சச்சரவு நிச்சயம் இருக்கும். அந்த வகையில், இப்போது 15வது உட்கட்சித் தேர்தல் தொடங்க இருப்பதாக தி.மு.க.. அறிவித்து உள்ளது.
தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் ஆரம்பம். வெட்டு குத்து நிச்சயம். யாரும் வாக்கிங் போகாதீங்க.

இன்று கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, ‘1949ம் ஆண்டு தொடங்கி உட்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரையில் ஜனநாயக அடிப்படையில் இதுவரை 14 பொதுத்தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம்.
கழக சட்டத்திட்டங்களின்படி, பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.
முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பேரூர்க் கழகம், மாநகர வட்டக் கழகத் தேர்தல்கள், அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர, மாநகரப் பகுதி கழக தேர்தல்களும், பின்னர் மாநகர கழகத் தேர்தல்களும் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் வெட்டுகுத்து நடக்கப் போகுதோ என்று மக்கள் அச்சப்பட ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால், தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தலுக்கு அப்படியொரு மதிப்பு இருக்கிறது.