மாற்று சமுதாய இளைஞர்களை திருமணம் செய்து கொண்ட சகோதரிகள் பாதுகாப்பு வேண்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சம்பவமானது குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக திருமணம் செய்த கணவன்களை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வந்த அக்காள் - தங்கை..! அங்கு நடந்த பஞ்சாயத்து!

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட அனங்காநல்லூர் என்ற இடத்தில் திவ்யா மற்றும் வித்யா என 2 சகோதரிகள் வசித்து வந்தனர். நித்யா வாலாஜாவை சேர்ந்த செல்வகணபதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களை போன்றே வித்தியாவின் சகோதரியான திவ்யா, குடியாத்தத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரும் சமுதாயத்தை சேர்ந்தவராவார். இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மாற்று சமுதாயத்தில் திருமணம் செய்துகொண்டதால், அவர்களுடைய சமுதாயத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உங்களுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்களுடைய கணவர்களுடன் குடியாத்தத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.