இந்திய தேசியக் கொடியை அவமதிப்பா..? சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின்

முதன்முதலாக அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஸ்டாலின். வழக்கமாக இரண்டாம் கட்டம் அல்லது மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான், தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள்


திடீரென என்ன ஆசை வந்ததோ, இந்த ஆண்டு ஸ்டாலின் நேரடியாக அறிவாலயம் வந்து தேசியக் கொடி ஏற்றிவைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு வில்லங்கம் கிளப்பட்டுவருகிறது.

அதாவது, தேசியக் கொடி ஏற்றுபவர்கள், அதற்கு சல்யூட் வைத்து 58 நொடிகள் வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், ஸ்டாலின் கொடியை ஏற்றி வைத்தவுடன் இனிப்பு வழங்கப் போய்விட்டார். மோடி தேசியக் கொடிக்கு எத்தனை மதிப்புடன் மரியாதை செலுத்துகிறார், ஸ்டாலின் எத்தனை வேகமாக ஓடுகிறார் என்று சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில்தான் ஸ்டாலின் தேசியக்கொடியை அவமதித்துவிட்டார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஏதோ, இந்த வருஷம்தான் ஏத்த வந்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். கத்துக்கோங்க ஸ்டாலின்.