மூடிய வீடு! மிகப்பெரிய சூட்கேஸ்! உள்ளே 24 வயது இளம் மருத்துவரின் சடலம்! பதற வைக்கும் சம்பவம்!

ரஷ்யாவில் 24 வயது பெண் மருத்துவர் தனது குடியிருப்பில் சடலமாக சூட்கேசுக்குள் அடைக்கப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


ஸ்கோவை சேர்ந்த 24 வயது இளம்பெண் எகடெரினா கெரக்லெனோவா. மருத்துவரான இவர் ட்விட்டரில் ஃபேஷன் மற்றும் சுற்றுலா தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வந்தார் இவருக்கு 85 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர்.

இவர் தனது பெற்றோரை விட்டுப்பிரிந்து குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தங்கள் மகளை பல நாட்கள் பல முறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் தொடர்பு கிடைக்காததால் அவர்கள் அவரது குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் ஆய்வு செய்தபோது தீராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அங்கிருந்த சூட்கேஸ் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் எகடெரினா சடலம் திணிக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில்புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வந்து புலனாய்வு மேற்கொண்ட போது அவரை கொன்றது யார் என்பது தொடர்பாக எந்த தடயமும் கிடைக்கவில்லை என்ற போதும் சி.சி.டி.வி. காட்சி ஒன்றை ஆய்வு செய்தபோது கரீனாவின் முன்னாள் ஆண் நண்பன் அங்கு வந்து சென்றது தெரிய வந்தது.

விசாரணையில் அந்த நபர் உடனான தொடர்பை அண்மையில் துண்டித்துக் கொண்ட எகடெரினா மற்றொரு ஆண் நண்பனுடன் பழகி வந்தது தெரியவந்தது. அந்த நண்பனுடன் ஜூலை 30 ஆம் தேதி தனது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

எனவே ஆத்திரம் காரணமாக இந்த கொலையில் முன்னாள் ஆண் நண்பன் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.