ஆற்றில் ஆனந்த குளியலில் பெண்கள்! மோட்டார் பைக் ஹேண்டில் பாரில் கேமரா! விபரீத இளைஞரால் ஏற்பட்ட களேபரம்!

இருசக்கர வாகனத்தில் கேமராவைப் பொருத்தி பெண்கள் குளிப்பதை படமெடுத்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரியில் முக்கிய கால்வாய்களுள் தோவாளை கால்வாயும் ஒன்று. இதன் அருகே உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மாலை மற்றும் காலை வேளைகளில் பெண்களும் ஆண்களும் குளிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

காலையில் பெண்கள் குளிக்கும் வேளையில் கால் வாய்க்கு அருகே இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும். அதே போன்று பெண்கள் குளித்து முடித்து சென்றவுடன் இளைஞர் ஒருவர் அந்த இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்செல்வார். ஒரே பதிவு எண்ணை கொண்டு இருந்த இருசக்கர வாகனம் என்பதால் அங்கு குளிக்க வரும் பெண்கள் சந்தேகித்தனர்.

உடனடியாக அவர்கள் ஊர் பெரியவர்களிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அடுத்த நாள் ஊர் பெரியவர்கள் மறைந்து நின்று நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அது அந்த இரு சக்கர வாகனத்தை பெண்கள் குளிக்கும் இடத்திற்கு அருகே நிறுத்தினார். குறிப்பிட்ட இடைவேளைகளில் அந்த வாகனத்திற்கு அருகில் வந்து சரிபார்த்து விட்டு சென்றுள்ளார்

அப்போது ஊர் பெரியவர்கள் அந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இது அவர்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் இருசக்கர வாகனத்தை பரிசோதித்து பார்த்தனர். 

வாகனத்தின் ஹெட்லைட்டில் ரகசியமாக கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த இளைஞனுக்கு தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.