கைக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த போது மருத்துவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மூச்சு திணறியபடியே பிறந்த குழந்தை! உடலும் நீல நிறத்தில் மாறியது! உயிரை காப்பாற்ற நர்சுடன் சேர்ந்து டாக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 18,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளத.
இந்தியா முழுவதிலும் 8,447 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 765 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பை மாநகருக்கு உட்பட்ட அலிபாக் என்ற இடத்தில் வாஜே நர்சிங் ஹோம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியையான பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறப்பதற்கு குறிப்பிடப்பட்ட நாளுக்கு, 10 நாளுக்கு முன்னரே குழந்தை பிறந்ததால், தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அதிக அளவில் மூச்சு திணறலும் ஏற்பட்டது. "சையனோசிஸ்" என்றழைக்கப்படும் உடல் நீலமாகும் நோயும் குழந்தைக்கு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அந்த மருத்துவமனையில் குழந்தையை காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் போதிய அளவில் இல்லாததால், சிறிது தொலைவில் இருந்த "ஆனந்தி மகப்பேறு மருத்துவமனை" போன் செய்து நிலைமையை எடுத்து கூறியுள்ளனர். உடனடியாக அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் குழந்தையின் நிலையை பரிசோதித்து உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உடனடியாக மருத்துவர் குழந்தை மற்றும் குழந்தையின் அத்தையை தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மிகவும் விரைவாக ஆனந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது கூறப்படுகிறது. சுமார் 12 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியானது. பலரும் மருத்துவரின் இந்த சமயோஜிதத்துக்கும், அவருடைய கடமை உணர்ச்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணமுள்ளனர்.