போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அஜாக்கிரதையாக அறுவை சிகிச்சை செய்ததால் 6 மாத காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலியில் துடித்த கர்ப்பிணி! அவசர சிசேரியன்! முகமே இல்லாமல் குழந்தை பிறந்த பயங்கரம்! டாக்டரால் நேர்ந்த விபரீதம்!
போர்ச்சுகல் நாட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் 7-ஆம் தேதியன்று குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை முகம், கண், மூக்கு ஆகியன இல்லாமல் பிறந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் மருத்துவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர் மருத்துவர் ஆர்தர் கார்வாலோ என்பவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர் கார்வாலோ மீது ஏற்கனவே 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. போர்ச்சுகல் நாட்டின் மருத்துவ நிர்வாகத்தினர் அவருடைய மருத்துவ பயிற்சியை 6 மாத காலத்திற்கு தள்ளி வைத்தனர்.
மேலும் 3 முறை அல்ட்ராசவுண்ட் சிகிச்சை மேற்கொண்ட பிறகும் குழந்தையின் குறைபாடுகளை அவர் கண்டுபிடிக்கவில்லை. குழந்தையானது அவருடைய மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையின் பெயர் ராட்ரீகோ என்பது குறிப்பிடத்தக்கது.