பொது இடத்தில் ஆண்களுடன் உல்லாசம்! பெண்களை கட்டி வைத்து தோலை உரித்த அதிகாரிகள்!

இந்தோனேஷியாவின் அசே மாகாணத்தில் பொது இடத்தில் தவறாக நடந்துகொண்ட திருமணமாகாத 5 ஜோடிகளுக்கு மக்கள் முன்னிலையில் கசையடி வழங்கப்பட்டது.


இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் அசே மகாணத்தில் தான் இஸ்லாமியச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இங்கு பொது இடத்தில் தவறாக நடந்துகொண்ட 5 ஜோடிகள் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். 

இந்நிலையில் அவர்களுக்கு வியாழக்கிழமை மக்கள் முன்னிலையில் கசையடி வழங்கப்பட்டது. அவர்கள் கைகள் கட்டப்படு சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட மக்கள் முன்னிலையில்  அதிகபட்சமாக 22 கசையடிகள் வரை வழங்கப்பட்டன.

அவர்கள் வலி தாங்காமல் துடித்ததை ஏராளமானோர் பார்த்தநிலையில் இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட இருவருக்கு தலா 100 கசையடிகள் வழங்கப்பட்டன.

மக்கள் முன் கசையடி என்பது கொடூரமானது என்றும், அதனை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலதுசாரி இயக்கங்களும், அதிபர் ஜோகோ விடோடோவும் வலியுறுத்தி வரும் நிலையிலும் மக்கள் இந்தப் பழக்கத்துக்கு ஆதரவாகவே உள்ளனர்.