மேயரை மறைமுகமாக தேர்வு செய்வதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என்று பன்னீர்செல்வம் சொல்லி வாயைக்கூட முடியவில்லை, அதிரடியாக, அரசாணை வெளியிட்டு அவர் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
மேயருக்கு மறைமுகத் தேர்தல். ராமதாஸின் மேயர் கனவுக்கு ஆப்பு! பன்னீரின் வாய்க்குப் பூட்டு! எடப்பாடி பழனிசாமி பலே பலே!
இன்று அதிரடியாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சேலம் ஆகிய இரண்டு மாநகராட்சி மேயரும் எங்களுத்தான் என்று ராமதாஸ் தொடர்ந்து கொடுத்துவந்த குடைச்சலும், பிரேமலதா கேட்டுவந்த 3 மாநகராட்சி மேயரும்தான் இந்த மறைமுகத் தேர்தலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், உண்மையில் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் பன்னீர்செல்வமும் பா.ஜ.க.வும் கொடுத்த நெருக்கடிதான் என்று எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனென்றால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பன்னீருக்குத்தான் அதிக பவர் உண்டு, அதை கவிழ்க்கத்தான் இந்த அறிவிப்பு என்கிறார்கள்.
இதுவே தடை போடுவதற்கு வசதியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.