மறைமுகத் தேர்தலுக்கான அவசர சட்டம்! அதிரடித் தீர்ப்பை வெளியிட்ட உயர்நீதிமன்றம்!

உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சி, மற்றும் பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது சட்டவிரோதமானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கிய நிலையில் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் , பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறை கையாளப்படும் என அவசர சட்டம் பிறப்பித்தது.

மறைமுக தேர்தலை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்த்து இருந்தது. மறைமுக தேர்தல் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சமூக விரோதமானது அல்ல என்று தெரிவித்திருக்கிறது. இதனால் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.