இந்தியாவின் பொருளாதார தர மதிப்பீடு மீண்டும் குறைவு! எச்சரிக்கும் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ்.


இந்திய பொருளாதார நிலை 'எதிர்மறையாக' செயல்பட்டு வருவதாக கூறி இந்தியாவின் தர மதிப்பிட்டை குறைத்துள்ளது. இந்தியாவின் கடன் மதிப்பீடு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டு அறிக்கைகளை கருத்தில் கொண்டு. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த "அரசு எடுத்து வரும் செயல்பாடுகள்" நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையாக இருக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

நாட்டில் உயர்ந்து வரும் கடன் சுமை மற்றும் பட்ஜெட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளை சமாளிக்க முடியாமல் திணறி வரும் அரசாங்கத்தின் பொருளாதார போராட்டத்தை இந்த அமைப்பு மேற்கோளிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு கடன் வழங்கும் பிரிவு மதிப்பீட்டை BAA2 என உறுதிப்படுத்தியது,

இது மிகக் குறைந்த முதலீட்டு தர மதிப்பெண் ஆகும். ஏற்கெனவே வெளியிட்டிருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு BAA3யில் இருந்து தற்போது BAA2 என குறைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிலையே இதற்கு காரணம் என்றும். ஆசியாவில் நிலவி வரும் ஏற்றுமதி குறைவும் ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார சூழலும் ஒரு காரணம் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது

பொருளாதார மந்தநிலையை சீர் செய்யவும் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்த அமைப்பின் ரிஸ்க் குழுவின் துணைத் தலைவர் வில்லியம் ஃபாஸ்டர்.

இந்த தரக்குறைவு அறிவிப்பினால் மற்ற நாடுகள் இந்தியா மீது கூடுதல் அழுத்தம் கொடுக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் பெரிய நிறுவனங்களுக்கான வரிகளில் சில தள்ளுபடிகள் செய்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த முயன்று வருகிறது மத்திய அரசு.

ஆனால் எதிர்கால சிந்தனை இல்லாத செயல்பாடுகளால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன, மேலும் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவும். வளர்ந்து வரும் வெளிநாட்டு கடன் சுமையை கட்டுப்படுத்த போராட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது என்று சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் கூறியுள்ளது.

2014 மற்றும் 2019 தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் முக்கிய வாக்குறுதியாக வேலைகளை உருவாக்குவது இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அதை நிறைவேற்ற முடியாமல் அரசு திணறி வருகிறது.

மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, ஆண்டுக்கு 1.2 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி