திருமணமான பெண்களில் இவர் தான் உலக அழகி.! மொரிசியசில் சாதித்த நம்ம கோயம்புத்தூர் அம்மணி!

மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்ற அழகி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.


இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்றுவரும், "மிஸ் இந்தியா" "மிஸ் யுனிவர்ஸ்", "மிஸ் சவுத் இந்தியா" ஆகிய அழகி போட்டிகள் நடைபெற்று வரும். இதுபோன்ற மொரிஷியஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சோனாலி பிரதீப் என்ற 38 வயது பெண்மணி பிளாட்டினம் பிரிவில் கலந்து கொண்டார். அவருடன் மொத்தம் 41 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் "இந்தியா யூனிவர்ஸ் எர்த்" என்ற பட்டத்தை தட்டி சென்றார். 

இந்நிலையில் இன்றவர் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது அவருக்கு அவருடைய குழந்தைகளும் உறவினர்களும் மிகவும் உற்சாகமான வரவேற்பை கொடுத்தனர். 

இந்த சம்பவத்தினால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.