மகளை மகனாக மாற்றி இந்திய கிரிக்கெட் அணியில் சேர வைத்த தந்தை! பல ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான உண்மை!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை சபாலி வர்மா தனது இளம் வயதில் வாய்ப்பு கிடைக்காததால் சிறுவன் என்று கூறி கிரிக்கெட் பயிற்சி பெற்றதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.


தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்துவரும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீராங்கனை சபாலி வர்மா இந்திய அணி சார்பாக விளையாடி வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 15 வயதான இளம் வீராங்கனை சபாலி வர்மா 33 பந்துகளில் 46 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் .

ஹரியானாவில் உள்ள கிரிக்கெட் அகாடமிகள் பெண் என்ற காரணத்தினால் சபாலி வர்மாவுக்கு பயிற்சி அளிக்க மறுத்துவிட்டன. பின்னர் சபாலி வர்மாவுக்கு ஆண்கள் போல தலைமுடியை வெட்டி , தனது மகன் என்று கூறி கிரிக்கெட் அகாடமியில் சேர்த்ததாகவும் சபாலி வர்மாவின் தந்தை சஞ்சீவ் கூறியுள்ளார் .

பத்தாம் வகுப்பு படித்து வரும் சபாலி வர்மா இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்றுத்தர வேண்டும் என்பது எனது நோக்கம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் என்று கூறி சபாலி வர்மா கிரிக்கெட்  அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .