பிரிட்டன் நீதித்துறையின் மிக உயரிய பதவி..! அசால்ட் செய்த இந்தியப் பெண்மணி! என்ன? யார் தெரியுமா?

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் என்பவர், பிரித்தானியா நாட்டின் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றார்.


இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர் சுயெல்லா பிராவர்மேன். இவரது பெற்றோர் கென்யா மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் குடியேறி வாழ்ந்து வந்தவர்கள். ஆனால் சுயெல்லா பிராவர்மேன் லண்டனில் இந்த தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.

லண்டனில் அமைந்திருக்கும் ஹீத்ஃபீல்ட் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை பயின்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதுமட்டுமில்லாமல் இவர் சட்டத்தரணி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சட்ட பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

சுயெல்லா பிராவர்மேன், பிரித்தானிய சட்ட வரலாற்றில் நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் அட்டர்னி ஜெனரல் ஆவார். கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முதல் பெண் அட்டர்னி ஜெனரல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த பதவிக்கு வந்திருப்பது இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளது.

இதுகுறித்து சுயெல்லாவிடம் கேட்ட பொழுது , அவர் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு தான் வந்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் மதிப்பிற்குரிய பதவியை நான் மதித்து சிறப்பான பணியை செய்து முடிப்பேன் எனவும் கூறியிருக்கிறார். இவரின் பதவி ஏற்பு விழா நீதித்துறை செயலாளர் ராபர்ட் பக்லேண்ட், தலைமை நீதிபதி இயன் பர்னெட் மற்றும் பார் கவுன்சிலின் தலைவர் அமண்டா பிண்டோ ஆகியோரின் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.