அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் முதல் இந்து மதப் பெண்!

2020ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்து பெண்மணியான துளசி அறிவித்துள்ளார்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துளசி கப்பார்ட். இவர் அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருந்து அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் அந்நாட்டில் முதல் இந்து எம்பி என்ற அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார். அந்நாட்டின் செல்வாக்கு மிகுந்த 25 பேரில் இவரும் ஒருவராக உள்ளார். 

ராணுவம் மற்றும் வெளியுறவு துறை சார்ந்த பணிகளில் இவர் சிறப்பாக செயலாற்றுவதாக போற்றப்பட்டார். ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசிக்கு தற்போது வயது 37. அக்கட்சியிலிருந்து ஏற்கனவே 13 பேர்2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக துளசியும் அறிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். அமெரிக்க மக்கள் நிறைய சவால்களை சந்திப்பதாக கூறியுள்ள அவர் அவற்றுக்கு தீர்வு காண உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அமெரிக்க அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டாள் அமெரிக்காவில் அதிபர் பதவியில் அமரும் முதல் இந்து பெண் என்ற வரலாற்றை துளசி படைப்பார். முதல் பெண் அதிபர் என்ற சாதனையும் இவர் நிகழ்த்துவார். ஆனால் கிறிஸ்தவர்கள் அதிகம் நிறைந்த அமெரிக்காவில் இதற்கான சாத்தியம் மிக குறைவு. இங்கே நூற்றில் ஒருவர் மட்டுமே இந்து என்பதால் துளசிக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைப்பது கடினம்.