இந்தியாவில் ஆண்கள் நுழையக்கூடாத கோயில்களும் இருக்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்தியாவின் முக்கியமான மதங்களில் ஒன்று இந்து மதம் ஆகும். இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்களும், கோவில்களும் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் என் தனி வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் உள்ளது.


பொதுவாக இந்தியாவின் சில கோவில்களில் பெண்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். அதற்கு முக்கியமான எடுத்துக்காட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலாகும். ஆனால் ஆண்களை அனுமதிக்காத கோவில்களும் இந்தியாவில் உள்ளது சில கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதில் மூன்று கோவில்கள் தென்னிந்தியாவிலேயே இருக்கிறது.

பிரம்மா கோவில்- புஷ்கர்:- ராஜஸ்தான் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே இந்து கோவில் ராஜஸ்தானின் புஷ்கரில் இருக்கும் ஜகத்பிதா பிரம்மா கோவில் ஆகும். இது அஜ்மீரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலுடன் ஒரு ஏரி இணைக்கப்பட்டுள்ளது, இந்த ஏரி புஷ்கர் ஏரி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மதேவர் இந்த ஏரியை செய்ததாக புராணங்கள் கூறுகிறது. ஆனால் அந்த நிகழ்வுக்கு பிரம்ம தேவரின் மனைவி சரஸ்வதி தேவி தாமதமாக வந்ததால் பிரம்ம தேவர் காயத்ரி தேவியை திருமணம் செய்து கொண்டு அந்த சடங்கை நிறைவு செய்தார்.

தனது இடத்தில் காயத்ரி தேவி அமர்ந்திருப்பதைக் கண்டு கோபமுற்ற சரஸ்வதி தேவி அவர்களை சபித்தார் அந்த கோவிலையும் சபித்தார். இந்த சாபத்தின் காரணமாக எந்த திருமணமான எந்த ஆணும் கோவில் கருவறைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதையும் மீறி நுழைந்தால் அவர்களின் திருமண வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை.

அட்டுகல் பகவதி கோவில்- திருவனந்தபுரம், கேரளா:- இந்த கோவிலில் நடக்கும் பொங்கல் திருவிழா (பொங்காலே) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த அட்டுகல் பகவதி கோவில் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் கிட்டதட்ட 30 லட்சம் பெண்கள் வருகை தருகின்றனர். இந்த புகழ் வாய்ந்த கோவில் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது.

இந்த கோவிலில் கண்ணகி தேவி(பார்வதி) மூலக்கடவுளாக இருக்கிறார். உள்ளூர் பெண்கள் இந்த கோவிலை பெண்களுக்கான சபரிமலை என்று கூறுகிறார்கள். இந்த கோவில், இந்து புராணங்களின்படி, சமூகத்தில் உள்ள தீய சக்திகளை தோற்கடிக்கும் பெண்களின் தெய்வீக சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தேவி கன்யா குமாரி – தமிழ்நாடு:- ஸ்ரீ பகவதிக்கு தனது இளம் பருவ வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்ட பகவதி மா கோவில் கன்யா குமாரியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபிய கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இந்து புராணங்களின்படி, இந்த கோவில் பரசுராம முனிவரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவில் இருக்கும் இடத்தில் சக்தியின் முதுகெலும்பு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு பாதுகாப்பாக இதன் உட்புறம் ஒரு காலபைரவர் கோவிலும் உள்ளது.

ஸ்ரீ பகவதி சன்யாசத்தின் கடவுளாக கருதப்படுகிறார். எனவே திருமணம் ஆன ஆண்கள் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை. பிரம்மச்சரியம் அல்லது சன்யாசத்தை பின்பற்றும் ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அதுவும் வாசற்கதவு வரை மட்டுமே. அங்கேயே நின்று ஸ்ரீ பகவதியை வணங்கிவிட்டு சென்று விட வேண்டும். சிவனை கணவராக பெறுவதற்காக பார்வதி தேவி இங்குதான் அவரது தவத்தை தொடங்கினார் என்று கூறப்படுகிறது. அதனால் பெண்கள் மட்டுமே இங்கு கருவறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சக்குலதுகாவ் கோவில் – ஆலப்புழா, கேரளா:- கேரளாவின் அலுப்புழா மாவட்டத்தில், தலவடி பஞ்சாயத்தில், நீரட்டுபுரத்திற்கு அருகில் இந்த துர்கா தேவி கோவில் அமைந்துள்ளது. வருடம் தோறும் இங்கு நடக்கும் ஒரு வார பண்டிகையான நாரி பூஜை என்னும் பொங்கல் பண்டிகைக்கு இலட்சக்கணக்கான பெண்கள் வருகின்றனர். மற்றொரு முக்கிய விழாவான தனு விழாவில் பத்து நாட்கள் விரதமிருந்த பெண்களின் கால்களுக்கு அங்கிருக்கும் தலைமை பூசாரி பூஜை செய்வார்.

இந்து மதத்தில் பல உண்ணாவிரத சடங்குகளைப் போலல்லாமல், சந்தோஷி மா விரதத்தில் ஆண்கள் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இது பெண்களும், திருமணமாகாத பெண்களும் மட்டும் கடைபிடிக்க வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை ஆண்கள் கடைபிடிப்பதோ அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு வருவதோ தடைசெய்யப்பட்டதாகும்.