கொடூர விபத்து..! மூளைச் சாவு அடைந்த அழகிய இளம் பெண்..! ஆனால் பலருக்கு உயிர்கொடுத்து நெகிழ வைத்த சம்பவம்!

இந்திய பெண்ணொருவர் கார் விபத்தில் இறந்த பிறகு, அவருடைய உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சரிதா ரெட்டி. இவருடைய வயது 25. இவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் மிச்சிகன் நகரத்திற்கு காரில் சென்றுள்ளார்.

மிச்சிகனிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக எதிரே மற்றொரு கார் வேகமாக வந்து இவர்களது கார் மீது மோதியுள்ளது. அந்தக்காரை ஓட்டி வந்த நபர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் காரில் சென்ற 4 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் சிலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு சென்று அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சரிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மற்ற 3 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சரிதா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், "இந்த பிறகு என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அவருடைய உடல் உறுப்புகளான இதயம் முதலியவற்றை மருத்துவர்கள் குடும்பத்தினரின் அனுமதி பெற்ற பிறகு தானமாக கொடுத்துள்ளனர். சரிதா ரெட்டியார்கள் மிக விரைவில் ஹைதராபாத் நகருக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆன்லைன் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.