காலை 7 மணி..! படுக்கை அறையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த 5 மாத கர்ப்பிணி பெண்..! சோதித்து பாத்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணும் அவரது காதலனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் உள்ள ஹட்சன் நதியில் கடந்த ஞாயிறன்று காலை 7 மணிக்கு மன்மோகன் மால் என்ற நபர் பேச்சு மூச்சு இன்றி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இவரை அடையாளம் கொண்ட போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கே மன்மோகன் மாலின் காதலி கோத்தாரி கரிமா என்ற பெண் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்தார். இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்த அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் கரிமா கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டு அந்த நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கரிமா கடந்த 2010-ம் ஆண்டு நடந்த மாஸ்டர் செஃப் இந்தியா போட்டியில் கடைசி சுற்று வரை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் ஒரு இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தற்போது அந்த பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இவர் தனது உணவகத்தை கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி மூடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த இவரின் மரணமும் அவரது காதலரின் மரணமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.