டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ சி சி வெளியிட்டுள்ளது இதில் இந்திய வீரர்கள் சிலர் தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஐ சி சி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!
இதில்
புஜாரா 881 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புஜாரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்தார். மேலும் தொடர் நாயகன் விருதையும் பெற்றிருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை வெல்ல புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ரிஷாப்
பாண்ட் 673 புள்ளிகளுடன் 17 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிஷாப் பாண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததால் இந்த முன்னேற்றத்தை தரவரிசை பட்டியலில் பெற்றுள்ளார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் விக்கெட்
கீப்பிங்கிலும் இவர் பல சாதனைகளை செய்து அசத்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
இந்திய
அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
பந்து வீச்சில் ஜடேஜா 794 புள்ளிகளுடன் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல் ரவுண்டர்களுக்கான தர வரிசை பட்டியலில்
ஜடேஜா 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.