இந்திய போர் ஹெலிகாப்டரை வீழ்த்திய இந்திய ஏவுகணை! நடு வானில் நிகழ்ந்த விபரீதம்!

இந்தியாவின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை இந்திய ராணுவமே சுட்டு வீழ்த்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. எல்லை தாண்டிச் சென்று இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அளித்தது. இதற்கு பதிலடியாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன.

அமெரிக்காவின் f16 ரக போர் விமானங்கள் உள்ளிட்ட 24 போர் விமானங்களை பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் அனுப்பியது. அவற்றை வழிமறித்து தாக்க இந்திய விமானப்படையும் விமானங்களை அனுப்பியது. இந்த நிலையில் ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து ஸ்பைடர் எனும் ஏவுகணை பாகிஸ்தான் விமானங்களை குறிவைத்து ஏவப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தவறுதலாக இந்திய ராணுவத்தின் mi 16 ரக ஹெலிகாப்டரை வீழ்த்தியது.

இந்த விபரீத சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேர் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்தபோது பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 7 பேர் பலியாகினர். பிப்ரவரி 27ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால் விமானப்படையின் ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போதுதான் ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து இந்தியா ஏவிய ஸ்பைடர் ரக ஏவுகணை இந்திய ஹெலிகாப்டரையே வீழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது. ஏவுகணையை தவறுதலாக பயன்படுத்திய ராணுவ அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது