ராணுவ அதிகாரிகளாகும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்! இந்திய வரலாற்றில் முதல்முறை!

டெல்லி: இந்திய ராணுவ அகாடமியில், முதன்முதலாக, இரட்டையர்கள் ஒரே நேரத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர்.


பஞ்சாப் மாநிலத்தில், கடந்த 1996ம் ஆண்டு பிறந்த இரட்டை சகோதரர்கள், அபினவ் மற்றும் பாரினவ் இருவரும், சிறுவயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவைபுரிய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருந்தார்கள். இதே ஆர்வத்துடன் முயற்சித்த அவர்களுக்கு, கடந்த 2018ம் ஆண்டு ராணுவ அகாடமியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதற்கான நுழைவுத் தேர்வில் சாதித்த இரட்டையர்கள், அப்படியே பயிற்சிப் படிப்பில் பங்கேற்றனர். எந்த சுணக்கமும் இன்றி, இருவருமே ஆர்வத்துடன் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்துள்ளனர். இருவருக்குமே தற்போது லெஃப்டினன்ட் பதிவ நிலை தரப்பட்டுளளது. இவர்கள் உள்பட 382 இளம் ராணுவ அதிகாரிகளுக்கு, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி மைதானத்தில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

அப்போது, இவர்கள் நடத்திய அணிவகுப்பு கண்கவரும் வகையில் இருந்தது. இதில், இந்த இரட்டையர்களை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்தனர்.  இந்த இளநிலை ராணுவ அதிகாரிகள், இந்திய ராணுவம் மட்டுமின்றி, பூடான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், ஃபிஜி, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் நட்புறவு முறையில் சேவை செய்ய அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.