10 நாள்ல நான் இன்னொருத்தரோடு மனைவி..! தயவு செஞ்சி என்ன அனுப்பி வைங்க..! கதறும் இளம் பெண்! அதிர்ச்சி காரணம்!

தமிழ்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சீனாவில் வேலை நிமித்தமாக சென்ற பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி தாயகம் செல்வதை தடுத்துள்ளதை அடுத்து அவர் தனக்கு பத்து நாட்களில் திருமணம் ஆகப் போவதாகவும் தன்னை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் எனவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


கடந்த சில தினங்களாக சீனாவை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை சேர்ந்த பல 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வசித்துவரும் இந்தியாவை சேர்ந்த பல மக்களை விமானம் மூலம் அனுப்பி வைத்து வருகின்றனர்.

அப்படியாக வரும் மக்களிடம் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிந்த பின்புதான் விமானத்தில் அனுமதிக்கின்றனர். அந்தவகையில் நம்முடைய தமிழ் நாட்டை சேர்ந்த ஜோதி என்ற பெண் ஒருவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்த நிறுவனம் சார்பாக அவர் சீனாவில் உள்ள வுஹான் நகரத்திற்கு பணி நிமித்தமாக சென்றிருக்கிறார்.

இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக உயிர் இழக்கத் துவங்கினர் . இதனை அடுத்து இந்திய அரசாங்கம் சீனாவில் உள்ள இந்தியர்களை விமானம் மூலம் பத்திரமாக நம் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தது . அந்த விமானம் மூலம் ஜோதியும் இந்தியா செல்வதற்கு ஆயத்தமானார்.

 விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கு முன்பாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி விமானத்தில் ஏற மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர் சீனாவில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக ஒரு வீடியோ பதிவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் ஜோதி தனக்கு வெறும் காய்ச்சல் மட்டும் தான் இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் கூறியிருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து வரும் 18ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகவும் ஆகையால் தன்மை இந்திய அரசாங்கம் உடனடியாக மீட்டு தாயகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தற்போது ஜோதி பதிவிட்டுள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.