எல்லோருக்கும் திருமணம் நடக்குது! பொருளாதாரமும் நல்லாதான் இருக்குது!! மத்திய அமைச்சர் பகீர் தகவல்!

பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நம் இந்திய நாடு தொடர்ந்து பல பொருளாதார சரிவை சந்தித்து வருவதாக பலரும் பல தரப்பிலிருந்து கூறி வருகின்றனர்.


அதாவது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை நாம் சந்தித்து வருகிறோம் . இதுதான் நிதர்சனமான உண்மை. மேலும் தொழில் துறைகளிலும் உற்பத்தி சரிந்து வருகிறது ஆகையால் வேலை வாய்ப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. 

இதனையடுத்து மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை சீர் செய்யுமாறு பல கட்சிகளும் அவர்களிடம் வாதம் செய்து வருகின்றனர் இருப்பினும் மத்திய அரசு பொருளாதார நிலையில் இந்திய நாட்டின் சீரான நிலையில் தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

மத்திய ரயில்வேதுறை இணையமச்சர் சுரேஷ் அங்காடி செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இடம் நாட்டின்பொருளாதார வளர்ச்சிக் குறைவு பற்றின கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விமானநிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் எல்லோருக்கும் கல்யாணம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. இவையெல்லாம் பொருளாதாரம் சீராக நடை நமக்கு காட்டுகிறது என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை வீழ்ச்சியை சந்தித்து தான் ஆகும். ஏனெனில் இது ஒரு சுழற்சி முறை. இருப்பினும் மோடி அவர்களின் சிறப்பான செயல் மூலம் அது மீண்டும் எழுச்சி பெற்று விடும். 

பிரதமர் மோடிக்கும் அவரது அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் நற்பெயரை கெடுக்கும் நோக்கிலே பலரும் மாதிரியான தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும் அமைச்சர் சுரேஷ் அங்காடி செய்தியாளர்களிடம் கூறினார்.