கிரிக்கெட் வாய்ப்பு சரியாக அமையாததை என்னி மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்ற பிரபல கிரிக்கெட் வீரர்! அதிர்ச்சித் தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார் தனது கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாததால் துப்பாக்கி எடுத்து சுட்டுக்கொள்ள முயன்றதாக அவரே கூறியுள்ளார்.


பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய பிரவீன்குமார் இந்திய அணிக்காக டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 68 ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் 77 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 27 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் ஸ்விங் பவுலர் ஆக இருந்த பிரவீன்குமார் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் வரத் தொடங்கிவிட்டனர். புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா ஒரு பல்வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு வந்ததால் பிரவீன் குமாருக்கு வாய்ப்புகள் குறைந்தது. 

மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால்2018 ஆம் ஆண்டு வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் தனது ஓய்வை அறிவித்தார். இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் எனது கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாத காரணத்தினால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

அதிலிருந்து நான் மீண்டு வருவதற்காக குடிக்க ஆரம்பித்தேன். நான் குடிப்பதால் தான் இந்த நிலைமையில் உள்ளேன் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். ஆனால் என்னிடம் உள்ள நல்ல விஷயங்களை பற்றி யாரும் பேசுவதில்லை.  எனக்கு கிரிக்கெட் விளையாடும் போது ஒரு பக்கம் கண் சரியாகத் தெரியாது. சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது என் கண்ணில் பந்து பட்டதால் இந்த பிரச்சனை எனக்கு ஏற்பட்டது. நான் கிரிக்கெட் விளையாடும் போதும் எனக்கு இந்தப் பிரச்சினை இருந்து கொண்டே வந்தது. இதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தேன். ஆனால் இந்தப் பிரச்சினை இருந்து என்னால் விடுபட முடியவில்லை.

ஒரு கட்டத்தில் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ஏன் சரியாக அமையவில்லை என்ற கேள்வி என்னிடம் கேட்டுக் கொண்டு மன உளைச்சலுக்கும் உள்ளானேன். ஒரு கட்டத்தில் மன உளைச்சல் மிக அதிகமானதால் என்னையே நான் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முடிவுசெய்து எனது காரை எடுத்து ஒரு இடத்திற்கு சென்று இருந்தேன். அந்த இடத்தில் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொள்ளலாம் என்று முயன்றபோது எனக்கு முன்பே ஒரு போட்டோ இருந்தது.

அந்த போட்டோவில் எனது குடும்பத்தார்கள் சிரித்தபடி என்னை பார்ப்பது போலவே இருந்தது. ஆகையால் எனது தற்கொலை முடிவை நான் கைவிட்டேன் எனவும் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.