இந்திய இளம் வீரருக்கு அடித்தது யோகம்! உலக கோப்பை அணியில் திடீர் சேர்ப்பு!

உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் காயத்தின் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவமானது இந்திய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் நான்கு ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். 

அந்த ஆட்டத்தில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்து அவருடைய கை விரல்களை திரும்ப கவசத்தில் வைத்து இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் அணியை சேர்க்கப்பட்டிருந்தார். தவான் கோப்பையும் பிற்பாதியில் உடல் தகுதி பெற்று விடுவார் என்று அணி தலைவர் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஷிகர் தவானின் கைவிரல்கள் ஜூலை மாதம் இறுதிவரை இரும்பு கலசத்திற்குள் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இந்திய அணியின் மேலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த அறிவிப்பினால் இந்திய அணியின் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.