தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகும் 11 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்க போகும் 11 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தான் பிசிசிஐ தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட போகும் 14 பேர் கொண்ட இந்திய அணி பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட போகும் 11 பேர்கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியல்:விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, புஜாரா, விஹாரி, மயங்க் அகர்வால், ரவிசந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, விரதமான் சாஹா (விக்கெட் கீப்பர்), இசாந்த் சர்மா, முஹமது ஷமி.