மாமியார் வீட்டுக்குள் புகுந்து தகராறு! பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது!

மாமியார் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்த இந்திய கிரிக்கெட் வீரர் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜகான். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனது கணவர் மற்றும் அவரது சகோதரர் தனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக ஜகான் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கும் கொல்கத்தா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தனது கணவர் சமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துவருவதாகவும் ஜகான் புகார் கூறிவந்தார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவிலுள்ள ஷமியின் பூர்வீக வீட்டுக்கு தனது குழந்தையுடன் திடீரென ஹசின் சென்றார்.

ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க சமியின் தாயார் மறுத்தார். இதனால் அங்கு ஹசின் ஜஹான் தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்ற போலீசார் ஹசின் ஜகானை கைதுசெய்தனர்.