ஹேப்பி பர்த்டே வீராட்கோலி!! உலக அளவில் குவியும் வாழ்த்துக்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி இன்று தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


விராட் கோலி சர்வதேச அளவில் சிறந்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச அளவில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக விராட் கோலி அறிமுகமாகி விளையாடிக் இருந்தார். இதுவரை 82 டெஸ்ட் போட்டிகளிலும் 239 ஒருநாள் போட்டிகளிலும் 72 T20 போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார். இதுவரை 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி 11280 ரன்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கும் பெருமை விராட் கோலியை சேரும். இதேபோல் கோலி கடந்த ஆண்டு மிக அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 10000 களை குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாள் காணும் விராட் கோலி, தனக்கு 15 வயது இருக்கும் பொழுது தானே தனக்கு எழுதிய கடிதம் ஒன்றை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு உள்ளார்.

இதனைப் பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் வீரேந்திர ஷேவாக், விவிஎஸ் லட்சுமணன், முகமது கைப், மயங்க் அகர்வால், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ் போன்றோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல் விராட் கோலியுடன் ஆர்சிபி அணியில் ஒன்றாக இணைந்து விளையாடும் பல்வேறு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.