இந்திய சினிமாவுக்கும் பாகிஸ்தானில் தடை! முட்டாள்களின் சொர்க்கம் என்று இந்தியாவை சூடாக்கும் பாகிஸ்தான் அமைச்சர்!

முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ வேண்டாம். பாகிஸ்தான் அமைச்சர் சூளுரை.


காஷ்மீர் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு, பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கேட்டுள்ளதாகவும். இதுபற்றி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம்  எழுதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுள்ளார்

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி வெள்ளிக்கிழமை சீனாவுக்குச் சென்று. பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் வாங் யி மற்றும் பிற உயர் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  370 வது பிரிவை ரத்து செய்வது தொடர்பாக ஐ.நா. அமைப்பை அணுகுவதற்கு. சீன அரசு  முழுமையாக ஆதரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் . 

இந்தியா மற்றும் பாகிஸ்தான்  இரண்டும் "நட்பு நாடுகளாக" கருதுவதாகவும், ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் சீனா குரேஷியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மற்றும்  போலந்து வெளியுறவு மந்திரி ஜேசெக் ஸாபுடோவிச் செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசினார்.,​

அப்போது பாதுகாப்பு கவுன்சில் சபைக்கு பாகிஸ்தானிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது என்றும், “அந்த விவகாரம் குறித்து விவாதித்து  "இரு நாடுகளும் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்வை இருதரப்பு ரீதியாக உருவாக்க சரியான முடிவை எடுக்கும் தெரிவித்திருந்தார் .

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெறுவதற்கான 370 வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் கடந்த வாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் உயர்ந்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் இந்திய துதுவரை  வெளியேற்றியதன்  மூலம் தனது  உறவுகளை குறைத்து, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை நிறுத்தியது. அதுமட்டுமின்றி. ராஜஸ்தான் எல்லையில் இரு நாடுகளையும் இணைக்கும் இந்தியாவுடன் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான்  அறிவித்திருந்தது.

இந்தியாவின் மீது உள்ள கோபம்  அதிகமாகி. பாகிஸ்தானில் உள்ள  திரையரங்குகளில் இந்திய திரைப்படங்களை திரையிடவும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஆதரவைப் பெறுவது பாகிஸ்தானுக்கு எளிதல்ல என்றும்.  தனது நாட்டு மக்களை "முட்டாள் சொர்க்கத்தில்" வாழ வேண்டாம். அதுமட்டுமின்றி தங்களது பலவீனத்தை மறைக்க இந்திய அரசு தவறு செய்கிறது என்றும். 

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர்களுக்கென்று பொருளாதார நலன்கள் உண்டு. இந்தியா 100 கோடிக்கு மேற்பட்ட மக்களின் வியாபார சந்தையாகிவிட்டது. ஏராளமானோர் அங்கு (இந்தியா) முதலீடு செய்துள்ளனர். இஸ்லாம் நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். அதனால் நமக்கு ஆதரவாக வர முஸ்லிம் நாடுகள் கூட தயங்குகின்றன. என  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி பேசியுள்ளார்.