அந்த உறுப்பை மாற்ற அறுவை சிகிச்சை! 42 வயது பெண்மணிக்கு பிறகு ஏற்பட்ட கொடூரம்!

துபாய்: இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட, இந்தியப் பெண் உயிரிழந்தார்.


இறந்த பெண்ணின் பெயர் ரீடா ஃபெர்னாண்டஸ். 42 வயதாகும் இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு பிறவியிலேயே இடுப்பு எலும்பு சற்று கீழிறங்கி இருந்ததாகக்கூறப்படுகிறது. நீண்ட காலமாக, இடுப்பு கோளாறால் அவதிப்பட்டு வந்த ரீடா, சமீபத்தில் அல் ஜாஹ்ரா மருத்துவமனையில், இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்போது அவருக்கு பல மணிநேரமாக, தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சை முடிந்தும், அவர் உடல்நலம் தேறாமல் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உபாதைகள் காரணமாக, திடீரென உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான வகையில், அவர் இப்படி அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அதேசமயம், துபாய் மருத்துவ சட்ட விதிகளுக்கு உள்பட்டே, அப்பெண்ணிற்கு, இத்தகைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக, மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மரணம் ஏற்படும் என்று தெரிந்தே, ரீடா இவ்வாறு ரிஸ்க் எடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.