உலகமெங்கும் நிலவிவரும் கொரோனா வைரஸ் இருளுக்கு மத்தியில் நம்முடைய ஒற்றுமையைக் காட்ட சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசியக்கொடி ஒளிர்விக்கப்பட்டுள்ளது, இதனை பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார்.
சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசியக் கொடி! நெகிழ்ச்சி காரணம்!
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாடு இந்த கோரப்பிடியில் சிக்கி இதில் இருந்து மீள்வதற்காக பாடுபட்டு வருகிறது.
உலகெங்கிலும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்த மற்றும் உலகளவில் 1,50,000 மக்களைக் கொன்று குவித்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், சுவிட்சர்லாந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது.
சுவிஸ் ஆல்ப்ஸில் மேட்டர்ஹார்ன் என்ற மிக பிரம்மாண்ட மலை அமைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையும் வலிமையும் தருவதற்காக சுவிஸ் லைட் ஆர்ட்டிஸ்ட் ஜெர்ரி ஹோஃப்ஸ்டெட்டர் பவர், 4,478 மீட்டர் பிரமிடு சிகரத்தை பல்வேறு நாடுகளின் கொடிகளின் கண்கவர் காட்சிகளை நம்பிக்கை வாசகங்களுடன் ஒளிரச் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த இவரது செயல் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜெர்ரி, கொரோனா நெருக்கடியால் போராடி வரும் இந்தியர்களுக்கு மகத்தான செயலை பற்றி விளக்கும் வகையிலும் நம்பிக்கையையும் வலிமையும் அதிகரிக்கும் நோக்கில் ஆல்ப்ஸ் மலையில் நம்நாட்டு மூவர்ண தேசிய கொடியை ஒளிர செய்துள்ளதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
COVID 19 க்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்த சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹார்ன் மலை, ஜெர்மாட், 1000 மீட்டருக்கும் அதிகமான அளவிலான இந்திய தேசியக் கொடியை ஒளிர செய்திருக்கிறார். இந்த செய்தியை பாரத பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மலைமீது ஒளிரச் செய்த தேசியக்கொடி புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். மேலும் இந்த பதிவிற்கு கேப்ஷனாக, உலகமே COVID-19 ஐ எதிர்த்துப் ஒன்றாக போராடி வருகிறது. மனிதகுலம் நிச்சயமாக இந்த தொற்றுநோயை வெல்லும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.