மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் புதிதாக களமிறங்க போகும் துவக்க ஆட்டக்காரர் யார் தெரியுமா?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய துவக்க வீரர் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. 

 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடப்போகும் இந்திய வீரர்கள் யார் யார் பங்கேற்க போகிறார்கள் ? என்று வரும் 21ஆம் தேதி தேர்வுக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் புதியதாக அணியில் களமிறங்க போகும் வீரர்கள் யாரென்றும் , தற்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து யாருக்கு ஓய்வளிக்க போகிறார்கள் எனவும் பலரும் விவாதித்து வருகின்றனர்.

நடைபெறப்போகும் இந்த கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் ரோகித் சர்மா ஓய்வின்றி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மாவிற்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடப்போகும் தொடரில் ஓய்வு அளிக்க வாய்ப்புகள் உண்டு என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஒருவேளை ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளித்துவிட்டால் அவருக்கு பதிலாக களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வியும் பலரது மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வரும் ஷிகர் தவான் சமீபகாலமாகவே விளையாடிய போட்டிகளில் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக இளம் வீரரான மயங்க் அகர்வால் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களம் இறக்க படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம் மயங்க் அகர்வால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி ஆடப்போகும் தொடருக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.