பங்களாதேஷ் அணியை கதிகலங்க வைத்த தீபக் சஹர்! டி20 தொடரை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி t20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது.


டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியினர் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், பின்னர் களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 35 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். 

மிக சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். இதில் ஒரு hat-trick சிக்சரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணியினர் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தனர். எனினும் அந்த அணியின் நயிம் மற்றும் மிதுன் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். எனினும் இந்திய அணியின் தீபக் சஹர் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2- 1 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றியது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி வெற்றிக்கு வழிவகுத்த தீபக் சஹர் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.