மூன்றே நாளில் மேட்ச்சை முடித்து பங்களாதேஷ் அணியை தெறிக்கவிட்ட இந்திய அணி!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடிய 243 ரன்களை குவித்தார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஷமி 4 விக்கெட்களையும் , அஷ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.