மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தெறிக்கவிட்ட தீபக் சஹார்! T20 தொடரை வென்ற இந்திய அணி!

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது .அந்த அணியின் பொல்லார்ட் அதிகபட்சமாக 58 ரன்களை எடுத்தார் .

இந்திய அணியின் தீபக் சஹார் சிறப்பாக பந்து வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் .

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது . இந்திய அணியின்  ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார் . கேப்டன் வீராட் கோலி 59 ரன்கள் எடுத்தார் .இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது .