பவுலிங்கில் தெறிக்கவிட்ட சஹர்! பேட்டிங்கில் மிரட்டிய கோலி! தென் ஆப்ரிக்காவை சம்பவம் செய்த இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .


டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பாவுமா கேப்டன் டி காக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய டி காக் 52 ரன்களிலும் , பாவுமா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 72 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தவான் சிறப்பாக விளையாடி 40 ரன்களை எடுத்தார்.

சிறப்பாக விளையாடிய இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.