கேப்டனாக அவதாரமெடுத்து மாஸ் காட்டிய கேஎல் ராகுல்! 5 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அபாரம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இந்த போட்டிகளில் கேப்டனாக களம் இறங்கினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய கொண்டாடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் லோகேஷ் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ராஸ் டைலர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஐந்து போட்டிகளையும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.