மேற்கிந்திய தீவுகளை தெறிக்கவிட்டு வென்ற இந்திய அணி! சதம் விளாசி விராட் கோலி அபாரம் !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் DLS முறையில் வெற்றி பெற்றது .


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது . இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அபாரமாக விளையாடி 120 ரன்களை விளாசினார் .ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 71 ரன்களை எடுத்தார் .

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டது . இதனால் போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .மேற்கு இந்திய தீவுகள் அணியின் லேவிஸ் மட்டும் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார் . மற்ற பேட்ஸ்மேன்கள் இந்திய  அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர் .

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது  . இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார் . இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .சதம் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்  .