சொந்த மண்ணில் இந்தியா அபாரம்! 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.


முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் ஃபாலோ ஆன் ஆன தென்னாப்பிரிக்க அணியை தனது இரண்டாவது இன்னிங்சை மீண்டும் தொடங்கியது. 

தென்ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இன்று நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி போட்டி துவங்கிய சிறிது நேரத்திலேயே மீதமுள்ள 2 விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.