ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட வென்ற இந்திய அணி! லோகேஷ் ராகுல், தவான் அபாரம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய தவான் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடி 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் லோகேஷ் ராகுல் மட்டும் தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து கொண்டே இருந்தார். இவர் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு நாலாபக்கமும் விளாசினார். இவர் 52 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆதம் சாம்பா 3 விக்கெட்களை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

எனினும் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டார். 98 ரன்கள் குவித்து இருந்த நிலையில் ஸ்மித் அவுட் ஆகி வெளியேறினார். இவர் அவுட் ஆன பிறகு இந்திய அணியின் வெற்றி உறுதியாகியது. இதனால் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது.

இதனால் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.